தினம் ஒரு திருமந்திரம்: பகுதி 1: பாயிரம் - 112 மந்திரங்கள் (Tamil Edition) por தாமரை செல்வன்

தினம் ஒரு திருமந்திரம்: பகுதி 1: பாயிரம் - 112 மந்திரங்கள் (Tamil Edition) por தாமரை செல்வன்

Titulo del libro: தினம் ஒரு திருமந்திரம்: பகுதி 1: பாயிரம் - 112 மந்திரங்கள் (Tamil Edition)

Autor: தாமரை செல்வன்

Número de páginas: 167 páginas

Fecha de lanzamiento: August 7, 2017

Descargue o lea el libro de தினம் ஒரு திருமந்திரம்: பகுதி 1: பாயிரம் - 112 மந்திரங்கள் (Tamil Edition) de தாமரை செல்வன் en formato PDF y EPUB. Aquí puedes descargar cualquier libro en formato PDF o Epub gratis. Use el botón disponible en esta página para descargar o leer libros en línea.

தாமரை செல்வன் con தினம் ஒரு திருமந்திரம்: பகுதி 1: பாயிரம் - 112 மந்திரங்கள் (Tamil Edition)

“திருமந்திரம்” என்னும் சொல் பலரையும் ஈர்க்கும் சொல்லாகும். திருமந்திரத்தை முழுமையாகக் கற்க வேண்டும் எனப் பலரும் ஆசைப்படுவர். திருமந்திரத்துக்கு இதுவரை உரை எழுதியவர்கள் சைவ சித்தாந்தத்தைக் கற்றுத் தேர்ந்து கரைகண்டவர்கள் மாத்திரமே.


திருமந்திரம் ஒரு மாபெரும் பொக்கிஷம். இது மனிதர்களுக்காக இறைவனால் அருளப்பட்டது. அது
சாதாரண மனிதனைச் சென்று அடையா விட்டால் திருமூலரின் தவமே பயனற்றது போலே ஆகி விடும்.


எனவே சாதாரணத் தமிழில் அதற்கு விளக்கம் எழுத வேண்டும் என்ற ஆசை என் மனதில் எழுந்தது. அதைத் தமிழ் மன்றம் என்ற இணைய மன்றம் நீர் விட்டு வளர்த்தது. எனவே எளிய நடையில் செய்யுள்களின் உண்மையான பொருள்களை எழுதியிருக்கிறேன்


“திருமந்திரம்” என்பது என்ன எனச் சுருக்கமாக திருமூலர் சொல்வது, “திருமந்திரம் என்பது சிவனால், மனிதர்களுக்காக, திருமூலர் மூலமாக தரப்பட்ட வேதம்”.


திருமந்திரம் வேதம் என்றாலும் வடமொழியில் வழங்கும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் மொழிபெயர்ப்பு அல்ல. வேதம் எனப்படுவது மறைபொருள். “குரு உரைக்கக் கேள்வியில் கற்பது” என்ற இலக்கணத்தின் காரணமாகவே இது வேதமாக அறியப்படுகிறது.


வடமொழி மற்றும் தமிழ் ஆகியவற்றைப் பற்றி திருமூலர் சொல்லும் பொழுது, “பனியுகத்தின் போது, சிவன் சக்திக்கு வேதாகமங்களைத் தமிழிலும், ஆரிய மொழி எனப்படும் சமஸ்கிருதத்திலும் உரைத்தார். உச்சரிப்புப் பிழை, இலக்கணம் காரணமாக ஏற்படும் சொல் மாறுதல்கள், பிரித்துப் பொருள் காணும் பொழுது உண்டாகும் மாறுதல்கள், சொல்லப்பட்ட இடம், காலம் ஆகிய பல விஷயங்களைப் பொருத்து பொருள் மாறுபாடு உண்டாகும். ஆகவே வேதாகமத்தை இரு மொழிகள் மூலமும் கற்றால் மட்டுமே வேதாகமத்தின் உண்மைப் பொருள் விளங்கும்”, என்கிறார்.


சமஸ்கிருதம் தேவபாஷை, தமிழ் நீசபாஷை என்று பேசித் திரிவோர்கள் இது போன்ற கருத்துக்களை, சாதாரண மக்களை சென்றடைய விடுவார்களா? அதனால் அதை அவர்கள் மறைத்து விடுகிறார்கள்.


திருமூலர், என்ன சொல்லி இருக்கிறார்? ஏன் சொல்லி இருக்கிறார்? எப்படிச் சொல்லி இருக்கிறார் என்று அறிய விழைபவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகச் சிறந்த கையேடாக இருக்கும் என எண்ணுகிறேன்.


இந்த விளக்கவுரைகள் எழுத எழுத மேலும் மேலும் எனக்குள் எழுந்த தெளிவு அனைவருக்குள்ளும் எழும் என்று நம்புகிறேன்.


இந்த நூலை நான் அமைத்த விதம் ஒரு நோக்கம் உடையது. ஒவ்வொரு செய்யுளையும் ஒரு பக்கத்திலேயே விவரித்து முடிக்க வேண்டும். தினம் ஒரு செய்யுளைச் சொன்னேன் எனத் திருமூலர் சொன்னார். அதே போல் தினம் ஒரு மந்திரம், ஒரே ஒரு பக்கம் கற்றுத் தெளியட்டும் என்பதற்காக ஒரு செய்யுளுக்கு ஒரு பக்கம் என ஒதுக்கப்பட்டுள்ளது.


இந்தப் புத்தகம் பாயிரம் என்ற அறிமுகப் பகுதியை விவரிக்கிறது.